நபராங்பூர்:ஒடிசாவில் காதலர் தினத்தன்று பாய் பிரண்டுடன் வரா விட்டால் கல்லூரிக்குள் நுழைய அனுமதி கிடையாது என தனியார் கல்லூரி நிர்வாகம் ஒட்டியதாக சமூக வலைதளங்களில் வெளியான நோட்டீஸ் வைரலாகி வருகிறது. நபராங்பூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி தகவல் பலகையில் விநோதமான நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது.
அதில், பிப்ரவரி 14-ஆம் தேதி அன்று மாணவிகள் அனைவரும் கட்டாயம் தங்கள் ஆண் நண்பருடன் கல்லூரி வர வேண்டும் என்றும், பாய் பிரண்டுடன் வராத மாணவிகளுக்கு கல்லூரிக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவிகளின் பாதுகாப்பு கருதி ஆண் நண்பருடன் வர அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.
பாய் பிரண்டுடன் அண்மையில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை கல்லூரி வாசலில் காண்பிக்க வேண்டும் என்றும் அந்த புகைப்படங்கள் அடையாள அட்டைக்கு இணையாக கருதப்படும் என அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு எல்லாம் மேலாக நோட்டீசில் கல்லூரி தலைமை ஆசிரியரின் கையொப்பம் இடப்பட்டு இருந்ததால் நோட்டீஸ் உண்மையானது என அனைவராலும் கருதப்பட்டது.