தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'அக்மார்க்' சன்னி லியோன் ரசிகர்களுக்கான ஆஃபர்.. ஆனால் ஒரு நிபந்தனை... - சிக்கன் கடை நடத்தும் சன்னி லியோன் ரசிகர்

கர்நாடகாவில் சன்னி லியோன் ரசிகர் நடத்தும் சிக்கன் கடையில், சன்னி ரசிகர்களுக்கு ஆண்டு முழுவதும் சிக்கனுக்கு சலுகை வழங்கப்படுகிறது.

chicken merchant from Mandya
chicken merchant from Mandya

By

Published : Apr 15, 2022, 2:14 PM IST

Updated : Apr 15, 2022, 2:24 PM IST

பெங்களூரு: கர்நாடக மாநிலம் மாண்டியா நகரில் உள்ள பெங்களூரு பார் சர்கிள் பகுதியில் உள்ள சிக்கன் கடையில் வியாபாரம் அமோகமாக நடைபெற்றுவருகிறது. அதற்கு முக்கிய காரணம் அங்கு ஆண்டு முழுவதும் வழங்கப்படும் சலுகையே. அந்த கடையின் உரிமையாளர் பிரசாத் வெறித்தனமான சன்னி லியோனின் ரசிகராவார்.

அதனால், தனது கடைக்கு வரும் சன்னி லியோன் ரசிகர்களுக்கு ஆண்டுதோறும் விலையில் 10 சதவீத சலுகை கொடுத்துவருகிறார். ஆனால், யார் வேண்டுமானாலும் வந்து சன்னி லியோன் ரசிகர்கள் என்று சொல்லி, சலுகை பெற்றுவிட முடியாது. அதற்கும் பிரசாத் மூன்று 'ஹாட்' கண்டியஷ்ன்களை வைத்திருக்கிறார்.

சன்னி லியோனின் வெறித்தனமான ரசிகர் பிரசாத்
  • முதலாவது நிபந்தனை: சலுகை பெற விரும்பும் வாடிக்கையாளர் கண்டிப்பாக சன்னி லியோனின் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் பக்கங்களை பின்தொடர வேண்டும்.
  • இரண்டாவது நிபந்தனை: குறைந்தபட்சம், சன்னி லியோனின் 10 புகைப்படங்கள் அவரின் செல்ஃபோனில் வைத்திருக்க வேண்டும்.
  • மூன்றாவது நிபந்தனை: சன்னி லியோனின் அனைத்து புகைப்படங்களுக்கும் லைக், கமெண்ட்களை பதிவிட்டிருக்க வேண்டும்.

இந்த மூன்று நிபந்தனைகளை இருந்தால்தான் 'அக்மார்க்' சன்னி லியோன் ரசிகர்கள் என அங்கீகராம் வழங்கப்பட்டு, அவர்களுக்கு சிக்கனில் சலுகை வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க: ரன்பீர்-அலியா திருமணம்... ரசிகர்களுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி...

Last Updated : Apr 15, 2022, 2:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details