புதுச்சேரிவினோபா நகரின் எல்லைப் பகுதியில் மாடுகள் வெட்டும் களம் உள்ளது. அரசின் அனுமதி பெறாத இந்தப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமைகள் மாடுகள் வெட்டுவது வழக்கம். இந்தப் பகுதியில் இரண்டு தினங்களுக்கு முன்பு கன்று ஒன்று வந்து சுற்றிக் கொண்டே இருந்தது.
'யாருக்குதான் அம்மான்னா பிடிக்காது' - தாய் பசுவை வெட்டிய இடத்தில் கதறி அழும் கன்று - கறிக்காக வெட்டப்பட்ட பசு
புதுச்சேரியில் கறிக்காக பசுவை வெட்டிய இடத்தில் அதன் கன்று தினமும் வந்த கதறும் வைரல் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Etv Bharat
அப்போது அவ்வழியே வந்த "வாயில்லா ஜீவன்களுக்கான அமைப்பு" தலைவர் அசோக்ராஜ் விசாரித்தபோது, இரு தினங்களுக்கு முன்பு பசு ஒன்று கறிக்காக வெட்டப்பட்டது. அந்த இடத்தை பார்த்த அதன் கன்று, அடிக்கடி இங்கு வந்து அழுவதாக கூறினார்கள். இதனை வீடியோ எடுத்த அசோக் ராஜ் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி உள்ளது.
இதையும் படிங்க:Video: அடுத்தடுத்த விபத்தால் ஆத்திரம்; வாகனங்களை சூறையாடிய மாணவர்கள்!