தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 9, 2022, 3:55 PM IST

ETV Bharat / bharat

ஜாகுவார் காருக்கு மூவர்ண பெயிண்ட் அடித்த தொழிலதிபர் - Vibe Modeஇல் சுதந்திர தின கொண்டாட்டம்

சூரத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் சுதந்திர தினத்தின் ‘ஹர் கர் திரிங்கா’ கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அவரது ஜாகுவார் ரக காருக்கு மூவர்ணத்தால் வர்ணம் பூசியுள்ளார்.

Etv Bharatஜாகுவார் காருக்கு மூவர்ண பெயிண்ட்  அடித்த தொழிலதிபர் - சுதந்திர தின ‘ஹர் கர் திரிங்கா’ கொண்டாட்டம்
Etv Bharatஜாகுவார் காருக்கு மூவர்ண பெயிண்ட் அடித்த தொழிலதிபர் - சுதந்திர தின ‘ஹர் கர் திரிங்கா’ கொண்டாட்டம்

குஜராத்(சூரத்): 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவின்' ஒரு பகுதியாக 'ஹர் கர் திரங்கா அபியான்' கொண்டாடப்படுகிறது. இதற்காக ஒரு புது விதமான செயலை சூரத்தைச் சேர்ந்த ஜவுளி தொழிலதிபர் ஒருவர் செய்துள்ளார். அவரது விலை உயர்ந்த காரான ஜாகுவார் ரக காரை மூவர்ணத்தில் பெயிண்ட் அடித்துள்ளார்.

இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' (சுதந்திர தின திருவிழா) கொண்டாடப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 13 முதல் 15 வரை நடைபெறும் இந்த விழாவில், 'ஹர் கர் திரங்கா அபியான்' என்ற பிரசாரத்தை நாடு முழுவதும் பரப்ப வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

இந்த பரப்புரைக்காக சூரத்தைச்சேர்ந்த ஜவுளி தொழிலதிபர் சித்தார்த் தோஷி, அவரின் ஜாகுவார் காரில் தேசியக்கொடி நிற பெயிண்டை அடித்துள்ளார். மேலும் சூரத்திலிருந்து டெல்லி வரை 1,150 கிமீ தூரம் வரை உள்ள மக்களை இணைக்கும் வகையில் இந்த காரில் பயணம் மேற்கொண்டு மூவர்ணக் கொடியை விநியோகித்து வருகிறார்.

ஜாகுவார் காருக்கு மூவர்ண பெயிண்ட் அடித்த தொழிலதிபர்

மேலும் இந்த வர்ணங்களால் காரின் தோற்றமே மாறிவிட்டது. இது குறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய சித்தார்த், ‘ நமது பிரதமர் நரேந்திர மோடி ஹர் கர் திரங்கா அபியானைத் தொடங்கிய விதமும், ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ திட்டமும் ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமைக்குரியது' எனக் கூறினார். இதைப்பற்றி ஒவ்வொரு குடிமகனுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த, 'எனது காரில் ஒரு சிறப்பு குறும்படம் போடப்படும்’ எனத் தெரிவித்தார்.

ஜாகுவார் காருக்கு மூவர்ண பெயிண்ட் அடித்த தொழிலதிபர்

மேலும் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவின் கீழ் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்புகிறேன். இதற்காக, மூன்று லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. சூரத்திலிருந்து டெல்லிக்குப் புறப்படுவோம், இதற்கிடையில் வழியில் இருக்கும் மக்களுக்கு மூவர்ணக் கொடியைப் பரிசளிப்போம். காரில் சுமார் 800 மூவர்ணகொடிகள் இருக்கின்றன’ எனக் கூறினார்.

சூரத்தைச் சேர்ந்த ஜவுளிதொழிலதிபர் சித்தார்த் தோஷி

இதையும் படிங்க:தெலுங்கானாவில் பாஜக பிரமுகர் தற்கொலை?

ABOUT THE AUTHOR

...view details