தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தமிழ்நாட்டிலிருந்து சபரிமலை சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து; 62 பேர் காயம் - நிலக்கல்

தமிழ்நாட்டைச் சேர்ந்த 62 நபர்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் முடித்து விட்டு திரும்பும்போது நிலக்கல் எனும் பகுதியில், அவர்கள் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 28, 2023, 3:40 PM IST

பத்தனம்தீட்டா (கேரளா): சபரிமலை ஐயப்பன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நேற்று திறக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 62 நபர்கள் பேருந்தினை வாடகைக்குப் பிடித்துக்கொண்டு, சபரிமலை சென்று, சுவாமி ஐயப்பனை தரிசித்தனர்.

இந்நிலையில், நேற்று தரிசனத்தை முடித்துவிட்டு, இன்று ஊர் திரும்பிக்கொண்டிருக்கையில், தமிழ் பக்தர்கள் வந்த பேருந்து நிலக்கல் என்னும் பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். பேருந்தில் பயணித்தவர்களில் 7 குழந்தைகள் உட்பட 62 பேர் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மற்றும் மாவட்ட, தாலுகா மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில் விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக பத்தனம்தீட்டா மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "மகிழ்ச்சியான நினைவுகள்" - அரசு பங்களாவை விட்டு வெளியேறுகிறேன் - ராகுல் காந்தி உதிர்த்த வார்த்தைகள்!

இதையும் படிங்க: EPFO Interest Hike: ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி - இபிஎஃப் வட்டி விகிதம் உயர்வு - எவ்வளவு தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details