தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீரில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து - பேருந்து பள்ளத்தில் விழுந்ததில் 9 பேர் இறந்தனர்

ஜம்மு காஷ்மீரின், சவ்ஜியாவில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

ஜம்மு காஷ்மீரில் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து
ஜம்மு காஷ்மீரில் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து

By

Published : Sep 14, 2022, 10:55 AM IST

ஜம்மு காஷ்மீர், பூஞ்ச் ​​மாவட்டத்தின் மண்டி தாலுகாவின் எல்லைப் பகுதியான சவ்ஜியாவின் பாரடி வாய்க்கால் அருகே பேருந்து ஒன்று ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்தது. இதில் பேருந்தில் பயணித்த 9 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

இதனையடுத்து உள்ளூர் மக்கள், போலீசார் மற்றும் ராணுவத்தினர் இணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள சவ்ஜியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முதலுதவிக்கு பின், மண்டி துணை மாவட்ட மருத்துவமனைக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க:210 நிமிடங்கள் மூடியிருந்த இதயம்.. வெற்றிகரமாக நிறைவுற்ற அறுவை சிகிச்சை

ABOUT THE AUTHOR

...view details