அஸ்ஸாம்:துப்ரி மாவட்டத்தில் இன்று (செப்.29) 29 பயணிகளுடன் பிரம்மபுத்திரா ஆற்றில் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழப்புகள் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை. இந்த விபத்தில் 2 பள்ளி குழந்தைகள் உள்பட 3 மாயமாகி இருப்பது தெரியவந்துள்ளது.
அஸ்ஸாமில் 29 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து - பிரம்மபுத்திரா ஆறு
அஸ்ஸாமின் துப்ரி மாவட்டத்தில் பிரம்மபுத்திரா ஆற்றில் 29 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Etv Bharat படகு கவிழ்ந்து விபத்து
படகு கவிழ்ந்து விபத்து
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த SDRF, NDRF பாதுகாப்பு வீரர்கள், காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதலில் 5 பேர் மீட்கப்பட்டு துப்ரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க:இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்ற சகோதரிகள் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழப்பு