தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

70 வயது மூதாட்டிக்கு ஆண் குழந்தை - A 70-year-old Women gives birth to a baby boy in Gujarat

குஜராத்தில் திருமணமாகி 45 ஆண்டுகளுக்குப் பிறகு 70 வயதான மூதாட்டி தொழில்நுட்பத்தின் உதவியுடன் குழந்தை பெற்றிருக்கிறார்.

மூதாட்டிக்கு ஆண் குழந்தை
மூதாட்டிக்கு ஆண் குழந்தை

By

Published : Oct 19, 2021, 2:15 PM IST

குஜராத் மாநிலம் கட்ச் அருகே உள்ள மோடா என்ற கிராமம் உள்ளது. இங்கு வசித்துவருபவர்கள் ஜிவுன்பென் ரபாரி (70) - மல்தாரி (75) என்ற வயதான தம்பதியினர். இவர்களுக்குத் திருமணமாகி 45 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தைபேறு இல்லை.

இந்நிலையில், குழந்தை இல்லாத வருத்தத்தில் இருந்த இவர்கள் மருத்துவர் ஒருவரை அணுகியுள்ளனர். அவரின் அறிவுரைப்படி இவர்கள் தொழில்நுட்பத்தின் உதவியுடன் குழந்தை பெற முடிவுசெய்தனர்.

அதன்படி, ஜிவுன்பென் ரபாரி தற்போது ஆண் குழந்தை பெற்றுள்ளார். உலகின் குழந்தை பெற்றவயதான அம்மாக்களின் வரிசையில் தற்போது ஜிவுன்பென் ரபாரியும் இணைந்துள்ளார்.

இதையும் படிங்க : பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details