மும்பை: மகாராஷ்டிரா மாநிலம்புனேவில் வசிக்கும் பிவசென் தகல்கர் (65) என்பவர் தான் வீட்டில் வளர்க்கும் நாயுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுவந்துள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்க இளைஞர்கள் அதை வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனிடையே அவர் மீது விலங்குகள் நலவாரியத்திடமும், காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.
நாயுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட முதியவர் மீது வழக்கு - பிவசென் தகல்கர்
மகாராஷ்டிரா மாநிலத்தில் நாயுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட முதியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் அவர் மீது ஐபிசி பிரிவு 377 (இயற்கைக்கு மாறான குற்றங்கள்) மற்றும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம்-1960 உள்ளிட்டவையின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.பொதுவாக விலங்குகளுடன் செக்ஸ் வைத்துக் கொள்வது ஆங்கிலத்தில் பீஸ்டியாலிடி (Beastiality) என்று அழைக்கப்படுகிறது. இதுதொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்படுவது குறைவே என்றாலும் உலகம் முழுவதும் இதுபோன்ற சம்பவங்கள் ஏராளமாக நடக்கின்றன. இந்தியாவில் இது தண்டனைக்குரிய குற்றமாகும்.
இதையும் படிங்க:உத்தரகாண்ட் தலைமைச் செயலக காவலர் தேர்வு முறைகேடு வழக்கில் முதல் கைது...