தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

போலீஸ் எனக் கூறி 17 வயது மாணவி வன்கொடுமை.. வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரம்! - Pocso

மகாராஷ்டிராவில் போலீஸ் எனக் கூறி 17 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இருவர், அதை வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

By

Published : Jan 28, 2023, 8:02 PM IST

தானே:மகாராஷ்டிரா மாநிலம் தானேவைச் சேர்ந்த 17வயது மாணவி தன் ஆண் நண்பருடன் சுற்றுலா சென்றுள்ளார். சாலையோரத்தில் பேசிக் கொண்டு இருந்தவர்களிடம் போலீஸ் எனக் கூறி இருவர் அறிமுகமானதாகக் கூறப்படுகிறது. விசாரணை செய்ய வேண்டும் என மாணவியை அழைத்துச் சென்ற நபர் பாலியல் வன்கொடுமை செய்ததாகச் சொல்லப்படுகிறது.

மேலும் மாணவியுடன் இருந்த ஆண் நண்பரை அழைத்துச் சென்ற வேறொரு இடத்தில் விட்ட போலீஸ் எனக் கூறிய மர்ம நபர், திரும்பி வந்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, அதை செல்போனில் வீடியோவாக படமெடுத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் நடந்த சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினால் வீடியோவை வைரலாக்கி விடுவதாக மாணவியை இருவரும் மிரட்டியதாக சொல்லப்படுகிறது.

சம்பவத்தால் மிரண்டு போன மாணவி நடந்தவற்றை தன் குடும்பத்தாரிடம் கூறி உள்ளார். மர்ம நபர்கள் குறித்து மாணவியின் குடும்பத்தினர் அளித்த புகாரில் போக்சோ வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக பாலியல் வன்கொடுமை தொடர்பாகப் புகார் அளிக்கச் சென்ற போது புகாரை பெறாமல் போலீசார் அலைக்கழிப்பு செய்ததாக மாணவியின் பெற்றோர் வேதனை தெரிவித்தனர்.

இதையும் படிங்க:Rahul Gandhi: புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட 40 வீரர்களுக்கு ராகுல் அஞ்சலி!

ABOUT THE AUTHOR

...view details