தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தெலங்கானாவில் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: போலீசார் விசாரணை

தெலங்கானாவில் 16 வயது சிறுமியுடன் நட்பாக பழகி வந்த இரண்டு இளைஞர்கள் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியதால் கர்ப்பமாகியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இளைஞர்களை தேடி வருகின்றனர்.

minor girl
minor girl

By

Published : Jul 4, 2022, 5:08 PM IST

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 16 வயதான சிறுமி இரண்டு ஆண்களுடன் நட்பாக பழகி வந்துள்ளார். ஒரு இளைஞர் சிறுமியை காதலிப்பதாகவும், மற்றொருவர் நட்பாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

பிறகு இருவரும் ஆசை வார்த்தைகள் கூறி, சிறுமியுடன் நெருக்கமாக பழகியுள்ளனர். இரண்டு இளைஞர்களும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால், பெற்றோர் மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றுள்ளனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர், அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரிக்கவே, தனது இரண்டு நண்பர்கள் குறித்தும் சிறுமி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியின் இரண்டு ஆண் நண்பர்களையும் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆன்லைனில் பணத்தை இழந்த இளம்பெண் தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details