தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆகாஷ விமான நிறுவனத்தை விமர்சித்து ட்வீட்; மும்பையில் 12ஆம் வகுப்பு மாணவன் கைது - threatening tweet

மும்பையில் ஆகாஷ விமான நிறுவனம் மீது அவதூறு பரப்பிய 12ஆம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டு அபராதத் தொகையுடன் விடுவிக்கப்பட்டார்.

ஆகாஷ விமான நிறுவனத்தை விமர்சித்து ட்வீட்
ஆகாஷ விமான நிறுவனத்தை விமர்சித்து ட்வீட்

By

Published : Apr 3, 2023, 7:25 PM IST

மும்பை:கடந்த மாதம் ஆகாஷ விமான நிறுவனம், தங்கள் நிறுவனத்தையும் சேவையையும் அவமதிக்கும் விதமாக ஆகாஷ விமானம் இனி நஷ்டமடையும் என சமூக வலைதளமான ட்விட்டரில் ஒருவரால் ட்வீட் செய்யப்பட்டிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த நிறுவனம், இதுகுறித்து தங்கள் நிறுவனத்தின்மீது அவதூறு பரப்பி, சமூகவலைதளத்தில் பதிவிட்டவரின் விவரம் குறித்த தகவல்களை கண்டுபிடித்து தண்டனை வழங்குமாறு மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தது.

இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட மும்பை நகர காவல் துறையினர் ட்வீட் செய்யப்பட்ட நபரின் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 505-ன் கீழ் வழக்குப் பதிந்து விசாரணையைத் துரிதப்படுத்தினர். மேலும் விசாரணையின்போது ட்வீட் செய்யப்பட்ட நபர் 12ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் எனத் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அந்த பள்ளி மாணவனை மும்பை நகர போலீஸார் மார்ச் 27ஆம் தேதி கைது செய்தனர். கைது செய்த மாணவனிடம் இது பற்றி விசாரித்தபோது, ''விமானம் மற்றும் அதன் சேவை குறித்து அதிக ஈர்ப்பினாலும், இந்தப் பதிவிற்கான பின்விளைவுகள் ஏதும் தெரியாமலும் செய்ததாக'' குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும் அந்த மாணவனின் படிப்பினை எண்ணி ஒரு நாள் காவல் நிலையத்தில் வைத்து இவ்வாறு இனி செய்யக்கூடாது என அறிவுறுத்தி ரூபாய் 5000 அபராதத்தொகை செலுத்திய பின்னர் விடுவித்தனர்.

இதையும் படிங்க:வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவது போன்ற போலி வீடியோ - யூடியூபருக்கு ஏப்.5 வரை நீதிமன்றக் காவல்

ABOUT THE AUTHOR

...view details