பெங்களூரு: பக்கவாதம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பெங்களூரு ஜே.சி. ரோட்டில் டிரஸ்ட் வெல் மருத்துவமனை சார்பில் நேற்று (அக்-29) நடைபயணம் நடத்தப்பட்டது. இந்த நடைபயணம் பக்கவாதத்திலிருந்து சிகிச்சை மூலம் விடுபட்ட முதியவரால் தொடங்கி வைக்கப்பட்டது. பெங்களூரு டிரஸ்ட் வெல் மருத்துவமனையில் வலது கை செயலிழந்த நிலையில் 102 வயது முதியவர் ஒருவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார்.
சிகிச்சையால் அவரது கை 50 சதவீதம் செயல்படத் தொடங்கியது. அடுத்த ஒரு மணி நேரத்தில் 90 சதவீதம் செயல்படத் தொடங்கியது. பக்கவாதம் ஏற்பட்டால் பலரின் வாழ்க்கை முடிந்து விடும் என்ற எண்ணத்தை டிரெஸ்ட் வெல் மருத்துவமனை மருத்துவர்கள் மாற்றியமைத்துள்ளதாக பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.