ஹைதராபாத்: உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானதாகவும், விலை உயர்வானதாகவும் உள்ள ஹார்லி டேவிட்சன் பைக் வாங்குவது என்பது பெரும்பாலான பைக் ரைடர்களின் கனவாகும். இந்நிலையில் நேற்று ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் HOG பேரணி நடந்தது. இதில் பலர் கலந்து கொண்டனர்.
இந்தப் பேரணியில் பங்கேற்க, பைக்கை வாங்கிய பின், 7,000 ரூபாய் கொடுத்துப் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்பவர்களுக்கு கிரெடிட் கார்டு போன்ற உறுப்பினர் அட்டை வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள அனைத்து ஹார்லி பைக்கரும் HOG எனப்படும் The Harley Owners Groupஇல் உறுப்பினர் ஆகலாம். ஹார்லி உரிமையாளர்கள் குழுமம் 2009இல் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஐந்து முறை நாட்டின் பல்வேறு பகுதிகளில் பேரணிகளை நடத்துகின்றனர்.
உலகமெங்கும் ஹார்லி டேவிட்சன் சொகுசு பைக் எல்லோரும் விரும்பும் ஒரு பைக்காகும். ஆனால், அந்த பைக்கை வாங்குவது எளிதானது அல்ல. அதை வாங்குவதற்கு பெரும் பணத்தைச் செலவழிக்க வேண்டும். ஆனால், தங்களிடம் நல்ல வருமானம் உள்ள பல இளைஞர்கள், ராயல் பைக் ஓட்டும் அனுபவத்தை விரும்பி இந்த பைக்குகளை வாங்குகிறார்கள். இவ்வாறு ஹார்லி டேவிட்சன் பைக் வாங்கிய ரைடர்ஸ் நடத்தும் பேரணி, இந்த முறை ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடந்தது. எந்த போக்குவரத்து நெரிசலும் இல்லாமல் உற்சாகமாக ஃபிலிம் சிட்டி வளாகத்தில் ரைடு சென்றனர்.
களைகட்டிய பேரணி : தென்னக ஹார்லி டேவிட்சன் உரிமையாளர்கள் குழுவின் (HOG) 9ஆவது பேரணிக்கான கொடியேற்றம் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் வெள்ளிக்கிழமையன்று நடந்தது. இதனைத்தொடர்ந்து நேற்று (ஆகஸ்ட் 28) நடந்த HOG பேரணி சிறப்பாக நடைபெற்றது.