தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 28, 2021, 6:51 PM IST

ETV Bharat / bharat

தடுப்பூசி திட்டத்தில் கைவிடப்பட்ட ஏழை நாடுகள்

உலகின் ஏழை நாடுகளில் இதுவரை ஒரு விழுக்காட்டிற்கும் குறைவானவர்களுக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

UNICEF
UNICEF

உலக பெருந்தொற்றான கோவிட்-19 பாதிப்பை கட்டுப்படுத்த சர்வதேச நாடுகள் தடுப்பூசி திட்டங்களை தீவிரத்துடன் முன்னெடுத்துவருகின்றன. அமெரிக்கா, இஸ்ரேல், பிரிட்டன், ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகள் தடுப்பூசி திட்டத்தை திறம்பட மேற்கொண்டுள்ளன.

கைவிடப்பட்ட ஏழை நாடுகள்

அதேவேளை பொருளாதார ரீதியாக பின்தங்கிய ஏழை நாடுகள் தடுப்பூசி திட்டத்தில் மிகவும் பின்தங்கிக் காணப்படுகின்றன. அண்மையில் வெளியான புள்ளிவிவரத்தின்படி, உலகளில் 10.04% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. இதில், ஏழை நாடுகளைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 0.9% மட்டுமே.

பொருளாதார ஏற்றத்தாழ்வு தடுப்பூசி கிடைப்பதிலும் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தியுள்ளது. இதைப்போக்கும் வகையில், அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து ஏழை நாடுகளுக்கு 100 கோடி டோஸ்கள் இலவசமாக வழங்க முன்வந்துள்ளன.

இவை விரைந்து கிடைத்தால் மட்டுமே உயிரிழப்பை வெகுவாக தடுக்க இயலும் என சுகாதாரத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கரோனா- ஆய்வில் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details