டெல்லி: இதுதொடர்பாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இந்தியாவில் கரோனா தொற்றுக்கு எதிராக கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் இதுவரை 109 கோடிக்கும் அதிகமாகனோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதற்கான சான்றிதழை கோவின் இணையதளத்திலிருந்து டவுன்லோடு செய்துகொள்ளலாம்.
96 நாடுகள் அங்கீகாரம்
இந்தியாவில் கரோனா தொற்று தடுப்பூசியை செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை 96 நாடுகள் அங்கீகரித்துள்ளன. இதில், கனடா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் அடக்கம்" என குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மையில், ஜப்பானில் கோவாக்சின் சான்றிதழுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கோவாக்சினுக்கு உலக அங்கீகாரம் - பாரத் பயோட்டெக் தலைவர் பெருமிதம்