சபர்கந்தா(குஜராத்):சபர்கந்தாவின் விஜயநகரில் உள்ள காடி வான்கடா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெமாஜி நினாமா, இவருக்கு தற்போது 95 வயதாகிறது. இவர்தான் குஜராத்தில் கடந்த 58 ஆண்டுகளாக ஓய்வூதியம் பெறும் மிக நீண்ட ஓய்வூதியம் பெற்றவர்.
95 வயது வரை ஓய்வூதியம் பெறும் குஜராத் முதியவர்! - 95 வயது வரை ஓய்வூதியம் பெறும் குஜராத் முதியவர்
குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்காந்தாவில் கடந்த 58 ஆண்டாக அரசின் ஓய்வூதியம் பெறும் முதியவர் ஒருவர் வசித்து வருகிறார்.
ஜெமாமி நினாமா 1927 இல் சுதந்திரத்திற்கு முன்பு பிறந்தவர், இவர் 1947 இல் காவல் துறையில் தனது பணியை தொடங்கினார், ஆனால் 1960 இல் மருத்துவ விடுப்பில் சென்று பின்னர் விஆர்எஸ் எடுத்தார். அன்று முதல் இன்று வரை மாநில அரசிடம் இருந்து ஓய்வூதியம் பெற்று வருகிறார். இந்த வயதிலும் அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும், யாரையும் சார்ந்து இல்லாமல் தனது வழக்கமான அனைத்து வேலைகளையும் செய்வதாகவும் அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
இதையும் படிங்க:கர்நாடகாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வேலை கிடைக்காமல் அவதி
TAGGED:
Indian Pension scheme