ஷாதோல்:மத்திய பிரதேச மாநிலம் ஷாதோல் அடுத்த ஜபல்பூர் பகுதியைச் சேர்ந்தவர் 92வயது மூதாட்டி. மட்வா கிராமத்தில் உள்ள தன் உறவினர்களை காண திட்டமிட்டுள்ளார். ஜபல்பூரில் இருந்து ஷதோல் நகருக்கு ரயில் மூலம் வந்த மூதாட்டி, நள்ளிரவில் ரயில் நிலையத்தை அடைந்துள்ளார்.
ஆட்டோ மூலம் அந்தாரா கிராமத்தை அடைந்த மூதாட்டி, தன் உறவினர்களின் சொந்த ஊரான மட்வா கிராமத்திற்கு செல்ல பேருந்திற்காக காத்துக் கொண்டு இருந்துள்ளார். இதனிடையே அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த நபர், மூதாட்டியை மட்வா கிராமத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறி வாகனத்தில் ஏற்றியுள்ளார்.
ஊர் எல்லையை தாண்டி காட்டுப் பகுதிக்கு சென்றதும், வாகனத்தை நிறுத்திய மர்ம நபர், மூதாட்டியிடம் எல்லை மீறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் காட்டுப்பகுதிக்குள் மூதாட்டியை இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது. சம்பவ இடத்தில் இருந்து உறவினர்கள் கிராமத்திற்குள் நுழைந்த மூதாட்டி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து உறவினர்களிடம் கூறியுள்ளார்.