தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சூடானின் 6 மாத போரில் 9,000 பேர் பலி - ஐ.நா தகவல்! - sudan war news

United Nations information on Sudan conflict: ஆறு மாதங்களாக சூடானில் நடைபெற்றுவரும் உள்நாட்டு போரில் 9 ஆயிரம் பேர் இறந்துள்ளதாகவும் இந்த மோதலால் சமூகங்கள் பிளவுபட்டுள்ளதாகவும் ஐ.நா உதவித் தலைவர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் கூறியுள்ளார்.

சூடானின் 6 மாத போரில் 9,000 பேர் பலி, சமூகங்கள் பிளவு
சூடானின் 6 மாத போரில் 9,000 பேர் பலி, சமூகங்கள் பிளவு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2023, 2:37 PM IST

கெய்ரோ (எகிப்து):சூடானில் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி உள்நாட்டு போர் வெடித்தது. அங்கே உள்ள ராணுவம் மற்றும் ஆர்எஸ்எப் எனப்படும் ராபிட் சப்போர்ட் போர்ஸ் இடையே நாட்டை யார் ஆள்வது.. ராணுவத்தை யார் கட்டுப்படுத்துவது என்ற மோதல் எழுந்தது.

அங்கே ராணுவத்தின் ஜெனரலாக அல் புர்ஹானும் ஆர்எஸ்எப் ஜெனரலாக டகாலோவும் உள்ளனர். கடந்த சில காலமாகவே இவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. சமீபத்தில் ஆர்எஸ்எப் அமைப்பை ராணுவத்துடன் இணைக்கும் முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவால் டகாலோவிற்கு, புர்ஹானுக்கு இணையான பவர் கொடுக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட மோதல் தற்போது அங்கே மிகப்பெரிய உள்நாட்டு போராக மாறி உள்ளது.

இந்நிலையில் ஆறு மாதாகாலமாக நடைபெற்று வரும் இந்த போரில் 9,000 பேர் இறந்துள்ளதாகவும் இந்த மோதலாக் சமூகங்கள் பிளவுபட்டுள்ளதாகவும் கூறிய ஐ.நா உதவித் தலைவர் மார்ட்டின் கிரிஃபித்ஸ், இது சமீபத்திய வரலாற்றில் மிக மோசமான மனிதாபிமானமற்ற செயல் என வேதனை தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாததில் இருந்து நடைபெற்று வரும் இந்த போர் ஆறு மாதங்களாகியும் மக்கள் பயங்கரவாதத்தில் இருந்து விடுபடவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இந்த போரால் சமூகங்கள் பிளவு: “கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறை குறித்து அதிர்ச்சியளிக்கும் வகையிலான அறிக்கைகள் தொடர்ந்து வந்து கொண்டுள்ளது. கார்ட்டூமில் ஆரம்பித்த இந்த மோதல் கிழக்கு ஆபிரிக்க நாடு முழுவதும் வெடித்து மேற்கு டார்பூர் பிராந்தியம் உள்ளிட்ட பல இடங்களுக்கு விரைவாக பரவியது.

இந்த மோதலில் ஏறக்குறைய 9,000 பேர் கொல்லப்பட்டது மட்டுமல்லாமல் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர். இந்த மோதலால் ஏற்பட்ட சமூக பிளவால் லட்சக்கணக்கான மக்கள், தங்களுக்கு தேவையான உதவிகள் கிடைத்த அண்டை நாடுகளுக்கு தப்பி செல்லும் சூழல் ஏற்பட்டது” என கிரிஃபித்ஸ் கூறினார்.

இதையும் படிங்க: ஆபரேஷன் அஜய்; இஸ்ரேலில் இருந்து தொடர்ந்து இந்தியர்கள் தாயகம் வருகை!

4.5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்: 4.5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் சூடானுக்குள்ளேயே இடம் பெயர்ந்துள்ள நிலையில், 1.2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த மோதலால் நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்ட அதாவது 25 லட்சம் மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக கிரிஃபித்ஸ் கூறினார்.

வான்வழித் தாக்குதல்கள், மக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் குண்டு வீச்சு: போரின் பாதிப்பு மட்டுமல்லாமல் தலைநகர் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் காலரா பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. கார்டோம், கோர்டோஃபான் மற்றும் கதாரிஃப் மாகாணங்களில் 1,000 க்கும் மேற்பட்டோருக்கு இந்த பதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கார்டூம், ஓம்டுர்மன் மற்றும் கார்டூம் நார்த் நகரங்களுடன் சேர்ந்து கிரேட்டர் கார்ட்டூம் பகுதியும் போர்க்களமாக மாறியுள்ளது. மக்கள் அதிகமுல்ல பகுதிகளில் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ஷெல் தாக்குதல்கள் நடந்தது.

கார்டூம் மற்றும் டார்ப் பகுதிகளில் பலாத்கார சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இதில் விரைவு படைகள் கடுமையாக குற்றம் சாட்டப்பட்டுள்ளன. RSF மற்றும் அதன் நட்பு அரபு போராளிகளும் டார்பூரில் அட்டூழியங்களில் ஈடுபட்டதாக ஐ.நா மற்றும் சர்வதேச உரிமை அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துவதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞர் அறிவித்திருந்தார்.

இதையும் படிங்க: அக்னி வீரர் தற்கொலையில் ராணுவம் விளக்கம்! தொடர் சர்ச்சைகளுக்கு ராணுவம் முற்றுப்புள்ளி!

ABOUT THE AUTHOR

...view details