தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிகாரில் 9 பேருக்கு தூக்கு.. சிறப்பு நீதிமன்றம் அதிரடி! - கோபால்கஞ்சில் 9 பேருக்கு தூக்கு தண்டனை

பாட்னா: பிகாரில் கள்ளச்சாராயம் குடித்ததில் 19 பேர் உயிரிழந்த வழக்கில், ஒன்பது பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

death
தூக்கு தண்டனை

By

Published : Mar 5, 2021, 6:22 PM IST

பிகார் மாநிலம் கோபால்கஞ்சில் கடந்த 2016 ஆகஸ்ட் 16ஆம் தேதி, கள்ளச்சாராயம் குடித்த விவகாரத்தில் 19 பேர் உயிரிழந்தனர். மேலும் ஆறு பேர் கண்பார்வையை இழந்தனர். இவ்விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, காவல் துறையினர் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் ஒருவர், வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே உயிரிழந்தார். மேலும், நான்கு பெண்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இவ்வழக்கில் சுமார் நான்கரை ஆண்டுகள் கழித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

அதில், குற்றஞ்சாட்டப்பட்ட ஒன்பது பேருக்குத் தூக்குத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிகார் வரலாற்றிலேயே ஒரு வழக்கில் ஒன்பது பேருக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

இதையும் படிங்க:அமரிந்தர் சிங்குடன் ஃபருக் அப்துல்லா 'பலே' டான்ஸ்!

ABOUT THE AUTHOR

...view details