தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சாலை விபத்தில் 9 பேர் உயிரிழப்பு! - கர்நாடகா மாநிலம்

கர்நாடக மாநிலத்தில் அதிவேகமாக சென்ற ஜீப் சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், 9 பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

dharwad
dharwad

By

Published : May 21, 2022, 4:59 PM IST

கர்நாடகா: கர்நாடகா மாநிலம் தார்வாட் அருகே நள்ளிரவில் அதிவேகமாக சென்ற ஜீப் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தில் சென்ற 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர்.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மனுஶ்ரீ என்பவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், விபத்துக்குள்ளான ஜீப்பில் 20 பேர் சென்றதாகவும், இவர்கள் மனசுரா கிராமத்தில் நடந்த நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொண்டு, திரும்பி வரும்போது விபத்து நேர்ந்துள்ளது என்றும் தெரியவந்தது.

இதையும் படிங்க: அஸ்ஸாம் வெள்ளம்: 7 லட்சம் பேர் பாதிப்பு, 9 பேர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details