மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள மலாட் மேற்குப் பகுதியில் நேற்றிரவு (ஜூன் 9) 11.30 மணியளவில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று சரிந்து விழுந்தது. இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மீட்புப் படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.
மும்பையில் இடிந்து விழுந்த அடுக்குமாடி குடியிருப்பு: 11 பேர் பலி - மும்பை செய்திகள்
மும்பை: மலாட் மேற்குப் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்துவிழுந்த விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மும்பை
முதற்கட்ட தகவலின்படி இதில் சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்ததாகவும், 15 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மும்பை டிஜிபி கூறுகையில், “குடியிருப்பு கட்டமைப்புகள் சரி இல்லாததே இந்த விபத்திற்குக் காரணம். தற்போதுவரை 15 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்றுவருகிறது” என்று கூறியுள்ளார்.
Last Updated : Jun 10, 2021, 7:24 AM IST