பாலக்காடு: கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தனியார் பள்ளி மாணவர்கள் ஊட்டிக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். அவர்கள் சென்ற பேருந்து வடகஞ்சேரி மங்கலம் அருகே கேரள அரசுப் பேருந்தின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் சுமார் 60 பேர் காயம் அடைந்தனர். இதனையடுத்து அவர்கள் திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.