தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'9.27 லட்சம் குழந்தைகளுக்கு மோசமான ஊட்டச்சத்து குறைபாடு' ஆர்டிஐ தகவல்! - ஊட்டச்சத்து குறைபாடு தகவல் அறியும் உரிமை சட்டம்

இந்தியாவில் 9.27 லட்சம் குழந்தைகளுக்கு மோசமான ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாகத் தகவல் உரிமை சட்டத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

malnourished
malnourished

By

Published : Jun 6, 2021, 7:29 PM IST

இந்தியாவில் நிலவும் ஊட்டச்சத்து குறைபாடு குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதில் பல்வேறு முக்கிய விவரங்கள் வெளியாகவுள்ளன.

ஊட்டச்சத்து குறைபாடு புள்ளி விவரம்

அதன்படி, நாட்டில் ஒன்பது லட்சத்து 27 ஆயிரத்து 606 பேருக்கு மிக மோசமான ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 3.98 லட்சம் குழந்தைகளுக்கும், பிகாரில் 2.79 லட்சம் குழந்தைகளுக்கு மோசமான ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது. குறைந்த எடை, குறைந்த உயரம் ஆகியவையே ஊட்டச்சத்து குறைபாட்டின் முக்கிய அளவுகோலாகக் கருதப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சி இலக்கு திட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவது முக்கிய இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பிரச்னையை சீர் செய்ய போஷான் அபியான் என்ற ஊட்டச்சத்து திட்டத்தை, கடந்த 2018ஆம் ஆண்டில் ஒன்றிய அரசு தொடங்கியது.

இதையும் படிங்க:'செளதி அரசின் நிலைப்பாட்டை பொறுத்தே ஹஜ் பயணம் முடிவாகும்' அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி!

ABOUT THE AUTHOR

...view details