மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகர் மும்பை பானப் பகுதியிலுள்ள தனியாருக்கு சொந்தமான கோவிட் பெருந்தொற்று பாதிப்பாளர்கள் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை (மார்ச் 26) நள்ளிரவு 12.30 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்தத் தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ பகுதிக்கு விரைந்துவந்தனர். பின்னர் அவர்கள் மருத்துவமனையில் பற்றியெரிந்த தீயை தண்ணீர் விட்டு பீய்ச்சி அடித்து அணைத்தனர். இந்த மருத்துவமனையில் மூன்றாவது தளத்தில் 76 கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்தத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 9ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் தீ விபத்து நடந்ததற்கான காரணங்கள் குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். தீ விபத்து குறித்து மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் கூறுகையில், “இந்த மருத்துவமனை வணிக வளாகத்தில் மிகவும் ஆபத்தான இடத்தில் செயல்பட்டுவந்துள்ளது.
மும்பை தனியார் மருத்துவமனையில் தீ: உயிரிழப்பு 9 ஆக உயர்வு இதனை தற்போதுதான் முதல்முறையாக பார்க்கிறேன். இந்த மருத்துவமனையிலிருந்து மீட்கப்பட்ட 7 நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மேலும், 70 நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்துவருகிறது” என்றார்.