சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் நடைபெற்றுவருகிறது. இதில், 2021-22ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட அறிக்கை முதன்முறையாக அமைச்சராகி உள்ள (நிதி மற்றும் மனிதவள மேலாண்மை) பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்துவருகிறார்.
அதில், தமிழ்நாடு காவல்துறையை மேம்படுத்துவதற்காக ரூ.8,930.29 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தெரிவித்தார். இதுகுறித்து அவர், நாட்டின் மிகத் திறமையான காவல்துறையான, தமிழ்நாடு காவல்துறையின் தரத்தை மேம்படுத்தவும், மனிதவளம், வாகனங்கள், கருவிகள், ஆயுதங்கள், தளவாடங்கள், கட்டமைப்பு ஆகிய தேவைகளை பூர்த்தி செய்யவும், மொத்தமாக ரூ.8,930 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.