புதுடெல்லி:இந்தியா முழுவதும் கரோனா மூன்றாவது அலை பரவி வருகிறது. தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகிவருகிறது.
இந்நிலையில் தற்போது நாடாளுமன்றத்தில் 875 ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31 அன்று தொடங்கவுள்ளது. இதற்காக 2,847 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில் அங்குள்ள 875 பேருக்கு கரோனா இருப்பது உறுதியாகிள்ளது.
நாடு முழுவதும் கரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் விதித்து வரும் நிலையில் நாடாளுமன்றத்தில் அதிகமாக தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடரானது ஜனவரி 31 முதல் ஏப்ரல் 8 வரை முதல் பாதிக்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு மாத கால இடைவெளியுடன் நடைபெறும். பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது.