புது டெல்லி : ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370, கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி மத்திய அரசால் திரும்பப் பெறப்பட்டது. அதன் பின்னர் நடைபெற்ற தாக்குதல்களில் 87 பொதுமக்கள், பாதுகாப்பு படை வீரர்கள் 99 பேர் உயிரிழந்துள்ளனர் என உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
மேலும் சிறப்பு சட்ட பிரிவு 370 நீக்கத்துக்கு 5 ஆண்டுகளுக்கு முன்னர் பொதுமக்கள் 177 பேரும், பாதுகாப்பு படை வீரர்கள் 406 பேரும் உயிரிழந்ததாகவும் தெரிவித்தார். இது குறித்து ராய், ஜம்மு காஷ்மீரில் 2014ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2019 ஆகஸ்ட் 4ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் 177 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.