தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒடிசாவில் மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு! - மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் உயர் கல்வி பயிலும் மாணவர்கள் 53 பேர் மற்றும் 31 மருத்துவ மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

Covid
Covid

By

Published : Nov 25, 2021, 4:00 PM IST

Updated : Nov 25, 2021, 5:35 PM IST

புவனேஸ்வர் : ஒடிசாவில் மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவின் சுந்தர்கார்க் (Sundargarh) மாவட்டத்தில் உள்ள உயர் கல்வியில் பயிலும் மாணவர்கள் 53 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல், சம்பல்பூர் (Sambalpur) மாவட்டம் பர்லா (Burla) அருகேயுள்ள விம்சார் (Vimsar) பகுதியில் வசிக்கும் 31 மருத்துவக் கல்லூரி மாணவர்களும் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா பாதிப்பு

அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இது குறித்து சுந்தர்கார்க் மாவட்ட நிர்வாகி பவன் கல்யாண் கூறுகையில், “மாவட்டத்தில் 53 மாணவர்கள் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் 8ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் ஆவார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது” என்றார்.

கோவிட் பாதிப்பு

விம்சார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் கரோனா வைரஸ் பாதிப்பினால் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அங்குள்ள விடுதிகளில் முன்னெச்சரிக்கை பணிகளை அலுவலர்கள் முடுக்கி விட்டுள்ளனர்.

கரோனா வைரஸினால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி கையிருப்பில் இல்லை - அமைச்சர் மா.சுப்ரமணியன்

Last Updated : Nov 25, 2021, 5:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details