நாடாளுமன்ற மக்களவையில் எழுத்துப்பூர்வமாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளீதரன், பல நாடுகளில் வலுவான தனியுரிமைச் சட்டங்கள் அமலில் இருப்பதால், சிறைக்கைதிகள் குறித்த தகவல்களை அந்நாட்டு அதிகாரிகள் அளிப்பதில்லை என்றும், சிறைக்கைதிகள் விருப்பப்பட்டால் மட்டுமே தருகிறார்கள் என்றும் தெரிவித்தார்.
கைதிகள் நிலை:வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் உள்ள தகவல்களின்படி, வெளிநாட்டு சிறைகளில் விசாரணைகக்கைதிகள் உள்பட, 8 ஆயிரத்து 278 இந்தியக் கைதிகள் உள்ளனர் என்றும், அவர்களில் 156 பேர் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் என்றும் தெரிவித்தார். வெளிநாட்டுச்சிறைகளில் உள்ள இந்தியர்கள் உள்பட, வெளிநாடுகளில் வாழும் அனைத்து இந்தியர்களின் நலனிலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது எனவும் தெரிவித்தார்.