ஜபல்பூர்:ஆசைக்கும், முயற்சிக்கும் வயது ஒரு தடையில்லை என்று பழமொழி ஒன்று உண்டு. மத்தியப் பிரதேசம் ஜபல்பூரில் சாந்தி பாய் என்ற 81 வயது மூதாட்டி அந்தப் பழமொழிக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார். தற்போதைய இளைஞர்களால்கூட முடியாததை சாந்தி பாய் துணிந்துசெய்கிறார்.
இந்த மூதாட்டி நாள்தோறும் 20 லிருந்து 22 கி.மீ. வரை சைக்கிளில் பயணம்செய்கிறார். சாந்தி பாய்க்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இருப்பினும், அவர் யாருடனும் இல்லாமல் தனியாக வசித்துவருகிறார்.
9 மணிநேரம் உழைப்பு
பல வீடுகளில் பணிபுரிந்துவரும் சாந்தி பாய், நாள்தோறும் காலை 8 மணிக்கு தனது வீட்டிலிருந்து புறப்பட்டு மாலை 5 மணிக்குப் பணியை நிறைவுசெய்கிறார். இதற்காக, நாள்தோறும் 20 லிருந்து 22 கி.மீ. வரை சைக்கிளில் செல்வதாகக் கூறும் சாந்தி பாய், சோர்வாக உணர்ந்தால் சாலை ஓரத்தில் சற்று ஓய்வு எடுத்துவிட்டு பின்னர் மீண்டும் பயணத்தைத் தொடங்குவேன் எனச் சாதரண குரலில் சொல்கிறார்.