தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 1, 2020, 7:12 AM IST

ETV Bharat / bharat

80 ஆயிரம் சிஆர்பிஎஃப் வீரர்கள் உறுப்பு தானம்!

டெல்லி: 80 ஆயிரம் சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உறுப்பு தானம் செய்துள்ளதாக மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சிஆர்பிஎஃப் வீர்கள் உறுப்பு தானம்
சிஆர்பிஎஃப் வீர்கள் உறுப்பு தானம்

இது குறித்து சிஆர்பிஎஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எய்ம்ஸின் உடைய 'உறுப்பு மீட்டெடுப்பு வங்கி அமைப்பானது (ORBO) மத்திய ரிசர்வ் காவல் படையுடன் (CRPF) கைக்கோத்து சிஆர்பிஎஃப் வீரர்களை உறுப்பு தானம் செய்ய ஊக்குவித்தது. அதில், சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் சிஆர்பிஎஃப் மத்தியில் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

அதனடிப்படையில், 80 ஆயிரம் சிஆர்பிஎஃப் வீரர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உறுப்பு தானம் செய்துள்ளனர். நாட்டில் இவ்வளவு எண்ணிக்கையிலான உறுப்பு தானம் செய்துள்ளது முதன்முறையாகும். இந்த உறுப்பு தானம் மூலம் கண்கள், தோல், நுரையீரல், இதயம், கல்லீரல், கணையம், சிறுநீரகம், இதய வால்வுகள், குடல் மற்றும் ரத்த நாளங்கள் தானமாக அளிக்க முடியும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:உறுப்பு தானத்தில் 6 ஆவது முறையாக தமிழகம் முதலிடம்!

ABOUT THE AUTHOR

...view details