மும்பை:இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படம் '800'. இப்படத்தை எம்.எஸ்,ஸ்ரீபதி என்பவர் இயக்கியுள்ளார். இந்நிலையில் மும்பையில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யா ஆகியோர் பங்கேற்றனர்.
அக்டோபர் 6ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தில், ஆஸ்கர் விருது பெற்ற படமான ஸ்லம்டாக் மில்லியனர் (Slumdog Millionaire) படத்தில் நடித்த மதுர் மிட்டல், (Madhur Mittal) இப்படத்தில் முத்தையா முரளிதரனின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முத்தையா முரளிதரன், "தன்னுடைய வாழ்க்கை படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சனத் ஜெயசூர்யா வருகை புரிந்ததில் தான் மிகவும் பெருமை அடைவதாகவும், இந்த படம் 5 ஆண்டுகளாகப் பல சிக்கல்களைக் கடந்து எடுக்கப்டதாகவும், மக்கள் நிச்சயம் இப்படத்தை விரும்புவார்கள் எனவும் தெரிவித்தார்.