தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு சார்ஜாவிலிருந்து G9-458 விமானம் வந்தது.
அதில், வந்த பயணிகளை சுங்கத் துறை அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது, இரண்டு பயணிகளின் லக்கேஜ்களை சோதனை செய்ததில், ஐபோன்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான 80 ஐபோன்களை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர், இருவரையும் கைது செய்தனர்.