உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவிலிருந்து மும்பைக்கு மருத்துவ சிகிச்சைக்காக 8 வயது சிறுமி தனது பெற்றோருடன் விமானத்தில் பயணித்துள்ளார். விமானத்தில் பயணம் செய்துகொண்டிருக்கும்போதே சிறுமிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. சிறுமியின் உடல் நிலை மிகவும் மோசமடையவே, விமானம் அவசரமாக நாக்பூரில் உள்ள டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் பயணித்த 8 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழப்பு - Mumbai from Lucknow
மும்பை: லக்னோவில் இருந்து மும்பைக்கு விமானம் மூலமாக பயணித்த 8 வயது சிறுமி மாரடைப்பு காரணமாக விமானத்திலேயே உயிரிழந்தார்.
mid flight death
அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், விமானம் தரையிறங்குவதற்கு முன்னரே, சிறுமி உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். முதல்கட்ட பரிசோதனையில் நெஞ்சுவலி காரணமாக சிறுமி உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்த மருத்துவர்கள், முறையான காரணம் தெரியவில்லை எனக் கூறினர். இதனிடையே சிறுமி, இயற்கை மரணமடைந்தார் என வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரது உடலைப் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க:சசிகலா விரைவில் குணமடைவார் - டிடிவி