தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிகாரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவர் கைது - பாலியல் குற்றங்கள்

பாட்னா: 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Minor girl rape
Minor girl rape

By

Published : Nov 15, 2020, 10:02 AM IST

பிகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை அன்று பூஜை செய்ய வீட்டிலிருந்து வெளியே சென்ற 8 வயது சிறுமி வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து குடும்பத்தினரும், அப்பகுதி மக்களும் சிறுமியை ஊர் முழுக்கத் தேடியுள்ளனர்.

அப்போது அதே ஊரைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் இருந்த அட்டைப் பெட்டியில் சிறுமி சடலமாகக் கிடந்ததைக் கண்ட அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனிடையே குற்றஞ்சாட்டப்பட்டவரை அப்பகுதியினர் தாக்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் குற்றஞ்சாட்டப்பட்டவரை கிராமவாசிகளிடமிருந்து மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை உடனடியாக தூக்கிலிடுமாறு பொதுமக்கள் காவல் துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர். பின்னர் சிறுமியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

சிறுமியைக் கொடூரமாகக் கொன்றவர் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், அவரைக் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடந்தப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:”அண்மையில் தான் திருமணம் நிச்சயிக்கப்பட்டது” - உயிரிழந்த தீயணைப்பு வீரரின் குடும்பத்தார் சோகம்!

ABOUT THE AUTHOR

...view details