கொல்கத்தா:மும்பையில் இருந்து கொல்கத்தாவிற்கு 123 பயணிகளை ஏற்றிக்கொண்டு விஸ்டாரா விமானம் சென்றது.
அந்த விமானம், தரையிரங்கும்போது வெளிப்புற காற்றின் அழுத்தம் அதிகமாக இருந்ததால், விமானத்தில் வந்த மூன்று பயணிகள் படுகாயமடைந்தனர். மேலும், 5 பேர் சிறிய அளவிலான காயமுற்றனர்.
வெளிப்புற காற்றின் அழுத்தம் அதிகமாக இருந்தசூழலிலும், விமானம் மாலை 4.25 மணியளவில் பாதுகாப்பாக தரையிரக்கப்பட்டது. படுகாயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.