தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராஜஸ்தானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் சாலை விபத்தில் உயிரிழப்பு! - Rajasthan Gudamalini

ராஜஸ்தான் பார்மர் மாவட்டத்தில் நடைபெற்ற சாலை விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ராஜஸ்தானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு!
ராஜஸ்தானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு!

By

Published : Jun 7, 2022, 11:18 AM IST

பார்மர் (ராஜஸ்தான்): நேற்று (ஜூன் 6) இரவு ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் உள்ள சாஞ்சூரில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எஸ்யூவி காரில் குடமாலானிக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது குடமாலினிக்கு 8 கிலோமீட்டர்களுக்கு முன்பு, எஸ்யூவி கார் எதிர்பாராத விதமாக டிரெய்லர் லாரியில் மோதி விபத்துக்கு உள்ளாது. இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், பலத்த காயமடைந்த 4 பேர் குடமாலானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தொடர்ந்து பலத்த காயமடைந்த இருவர், சாஞ்சோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், தகவலறிந்த குடமாலானி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், உயிரிழந்தவர்களின் சடலங்களை உடற்கூராய்வு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:தனியார் பேருந்து - ஆம்னி வேன் மீது மோதிய விபத்து: பதைபதைக்கச் செய்யும் சிசிடிவி காட்சி!

ABOUT THE AUTHOR

...view details