டெல்லி : கரோனா இரண்டாம் அலை நாடு முழுக்க பெரும் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தியது. நாடே மூச்சுவிட சிரமப்பட்டது. இந்நிலையில் 798 மருத்துவர்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவர் சங்கம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
கரோனா இரண்டாவது அலை, டெல்டா பிளஸ் வைரஸ் என கோவிட்-19 அச்சுறுத்திவருகிறது. இதற்கிடையே கோவிட் இரண்டாம் அலையில் சிக்கி தற்போதுவரை 798 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.
டெல்லி முதலிடம்
இது குறித்து இந்திய மருத்துவர் சங்கம் வெளியிட்டுள்ள தகவலின்படி தலைநகர் டெல்லியில் அதிகப்பட்சமாக 128 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்த இடத்தில் பிகாரில் 115 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.
அடுத்து உத்தரப் பிரதேசத்தில் 79 மருத்துவர்களும், கேரளாவில் 24 மருத்துவர்களும், மகாராஷ்டிராவில் 23 மருத்துவர்களும் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியை பொருத்தவரை உயிரிழப்பு 1ஆக உள்ளது.