மாநில அரசு, யூனிசெப், அக்ஷரா என்னும் அரசு சாரா அமைப்பு இணைந்து இதுபோன்ற திருமணங்களை குறைப்பதற்கான புதிய பரப்புரையை மேற்கொண்டு வருகின்றன. இதனையடுத்து யஷோமதி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
தற்போது உள்ள ஊரடங்கு காலத்தில் குழந்தைத் திருமணங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், புதிய பரப்புரை ஒன்றை இம்மாதம் 5ஆம் தேதி முதல் செப்டெம்பர் இறுதி வரை நடத்த மாநில அரசு திட்டமிட்டிருந்தது.
கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து சோலாபூர் மாவட்டத்தில் 88 குழந்தை திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. "கிராமக் குழந்தை பாதுகாப்புக் குழுக்கள், அமைப்புகள், சைல்டு லைன் (1098) மூலம் இதுபோன்ற நிகழ்வுகளை ஆரம்பக் கட்டத்திலேயே தடுக்க மாநில அரசு போராடி வருகிறது" என யஷோமதி தெரிவித்தார்.
இந்தியாவில் குழந்தைத் திருமணங்கள் நடைபெறும் முதல் ஐந்து மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பிச்சைக்காரர்கள் அற்ற மாநிலமாக உருவாகிவரும் ராஜஸ்தான்