டெல்லி:இந்தியா சுதந்திர காற்றை சுவாசிக்க ஆரம்பித்து முக்கால் நூற்றாண்டு நிறைவடைந்ததையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளும், கொண்டாட்டங்களும் நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில் பிரதமர், முதலமைச்சர் பல அரசியல் கட்சித் தலைவர்கள் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
குடியரசுத் தலைவர் முர்மு: நாட்டின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவரான திரெளபதி முர்மு விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், ‘ஆயுதப் படைகளுக்கும், வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரக உறுப்பினர்களுக்கும், தங்கள் தாய்நாட்டிற்கு தொடர்ந்து பெருமை சேர்க்கும் புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி: 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்று மரியாதை செலுத்தினார். மேலும் அவரது ட்விட்டரில், ‘ இந்த நல்ல நாளில் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். ஜெய்ஹிந்த்’ என பதிவிட்டுள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா விடுத்துள்ள பதிவில், ‘76வது சுதந்திர தின வாழ்த்துக்கள். இந்தியாவின் கலாச்சாரம், துடிப்பான ஜனநாயக பாரம்பரியம் மற்றும் 75 ஆண்டுகால சாதனைகள் குறித்து பெருமிதம் கொள்ள வேண்டிய நாள் இன்று. எள் நாட்டில் சுதந்திர சூரிய உதயத்தை ஏற்படுத்திய சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு தலைவணங்குவதுடன், நாட்டின் பாதுகாப்புக்காக அனைத்தையும் தியாகம் செய்த வீரர்களுக்கு தலைவணங்குகிறேன்’ என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:நாட்டின் மிகப்பெரிய நம்பிக்கை பெண்களே... குடியரசு தலைவர் திரௌபதி முர்மு...