டெல்லி:ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்கு ஆண்டுதோறும் யுபிஎஸ்சி தேர்வுகளை நடத்திவருகிறது. அதன்படி கடந்தாண்டு (2020) நடைபெற்ற தேர்வுகளுக்கான முடிவுகளை தேர்வாணையம் இன்று (செப்.24) வெளியிட்டுள்ளது. இதில் சுபாம் குமார் என்பவர் முதலிடம் பிடித்துள்ளார்.
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு - 761 பேர் தேர்ச்சி - டெல்லி
யுபிஎஸ்சி தேர்வு எழுதியவர்களில் 761 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு
ஜக்ரதி அவஸ்தி, அங்கிதா ஜெயின் ஆகியோர் முறையே இரண்டாம் , மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளனர். தேர்வு எழுதியவர்களில் 545 ஆண்கள், 216 பெண்கள் என 761 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க: ஊராட்சி தலைவர்கள் கவனத்திற்கு - அறிவிப்பு தர இன்றே கடைசி நாள்