கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 76 கரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
கோவாவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை: 76 கரோனா நோயாளிகள் உயிரிழப்பு - goa
பனாஜி: கோவாவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 76 கரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
ஆக்ஸிஜன் பற்றாக்குறை
இன்று (மே.14) அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை மட்டுமே 13 கரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். கோவாவில் நிலவும் ஆக்ஸிஜன் பற்றாக்குறைக்கு ஆளும் கட்சியின் செயல்பாட்டை எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளனர்.
முன்னதாக, உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு சமர்பித்த அறிக்கையின்படி, கோவாவில் கடந்த ஏப்ரல் 30 முதல் மே 11 வரை 378 பேர் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், கோவாவில் 2,491 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.