நாட்டின் பெருமைக்குரிய பல்கலைகழகங்களில் ஒன்றான ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம், காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் மூலம் உருவானது. 1920ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி உருவான இந்தப் பல்கலைகழகம், நூற்றாண்டைத் தாண்டியும் நாட்டின் சமூக அரசியல் சிந்தனைக் களத்தில் முக்கிய பங்காற்றுகிறது.
இந்தியா தனது 75ஆவது சுதந்திர ஆண்டைக் கொண்டாடிவரும் இந்த வேளையில் ஜாமியாவின் நிறுவனர்களான டாக்டர் முக்தார் அகமது அன்சாரி, ஹகிம் அஜ்மல் கான் ஆகிய இருவரையும் நாம் நினைவு கூர வேண்டும்.
ஜேஎம்யு பல்கலைகழகத்தை உருவாக்கியதோடு மட்டுல்லாது, இவர்கள் இருவரும் நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக நின்று பெரும் பங்காற்றியுள்ளனர். 1928ஆம் ஆண்டு முதல் 1936ஆம் ஆண்டு வரை ஜாமியா பல்கலைகழகத்தின் துணை வேந்தராக இருந்தவர் டாக்டர் அன்சாரி.
காங்கிரஸ், முஸ்லீம் லீக் உறுப்பினரான இவர், உடல்நல சிக்கலால் தவித்துவந்த பல விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு பல்வேறு உதவிகளை புரிந்துள்ளார்.
சுகாதாரத்துறை மூலம் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு டாக்டர் அன்சாரி பெரும் பங்காற்றியதாக வரலாற்று ஆய்வாளர் சொஹைல் ஹாஸ்மி கூறுகிறார். அன்றைய காலத்தில் இந்தியாவில் மூன்று பிரபலமான சர்ஜன்கள் இருந்தனர்.
ஜாமியா பல்கலைகழகத்தை நிறுவிய கல்வித் தந்தைகள் கொல்கத்தாவைச் சேர்ந்த பிதன் சந்திரா ராய், மும்பையைச் சேர்ந்த மிராஜ்கர், டெல்லியைச் சேர்ந்த முக்தார் அகமது அன்சாரி ஆகியோர்தான் இம்மூவர். டெல்லி தரியா கஞ்ச்சில் உள்ள டாக்டர் அன்சாரியின் பெரிய இல்லத்தில் முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் வந்து தங்கி விடுதலைப் பணியை ஆற்றியுள்ளனர்.
விடுதலைப் போராட்டத்தில் காங்கிரஸ், சோசியலிஸ்ட், கம்யூனிஸ்ட், புரட்சியாளர் குழு என பலதரப்பட்ட கொள்கைகளைக் கொண்டவர்கள் இருந்தனர். இவர்கள் அனைவருக்கும் கொள்கை வேறுபாடு இன்றி, டாக்டர் அன்சாரி தனது இல்லத்தில் அடைக்கலம் தந்தார்.
விடுதலைப் போராட்ட வீரர்களைப் பார்த்து அண்ணல் காந்தி டெல்லிக்கு நீங்கள் வந்தால் உங்கள் ராஜா யார் என்று கேட்டால், அதற்கு அவர்கள் டாக்டர் அன்சாரியின் பெயர்தான் கூறுவார்களாம். டாக்டர் அன்சாரியின் புகழ் அத்தகையது.
1868ஆம் ஆண்டு பிறந்த ஹகிம் அஜ்மல் கான், கிலாபத், ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று மக்களுக்கு இலவச மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளார்.
1920ஆம் ஆண்டு காந்தி தலைமையில் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் முன்னணி தலைவர்களான ஷௌகத் அலி, முகமது அலி, மௌலானா அப்துல் கலாம் ஆசாத் ஆகியோர் ஆங்கிலேயக் கல்வி முறையை எதிர்த்தனர்.
ஆங்கிலேயர்கள் உருவாக்கிய, நடத்திவந்த கல்வி நிலையங்களை புறக்கணிக்கும் விதமாக, தேசிய எண்ணம் கொண்ட ஆசிரியர்கள், மாணவர்கள் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறி எதிர்ப்பைக் காட்டினர். இந்த எதிர்ப்பாளர்களில், மௌலானா மெஹ்மூத் ஹசான், மௌலானா முகமது அலி, ஹகிம் அஜ்மல் கான், முக்தார் அகமது அன்சாரி, அப்துல் மஜித் காஜ்வா ஆகியோர் அடக்கம்.
ஆஜ்மல் கானின் தந்தை ஷரிப் மன்சில் பகுதியில் மருத்துவமனை ஒன்றை உருவாக்கினார். காலப்போக்கில் இந்தப் பகுதியில் காங்கிரஸ் அலுவலகம் அமைக்கப்பட்டு, டெல்லியின் அனைத்து காங்கிரஸ் கூட்டமும் அங்குதான் நடத்தப்பட்டது.
ஜாமியா பிரெஸ், மக்தபா, நூலகம் ஆகியவை தவிர ஜாமியாவின் அனைத்து நிறுவனங்களும் தற்போதைய புதிய வளாகத்திற்கு மாறியுள்ளன. 1927ஆம் ஆண்டு அஜ்மல் கான் மறைந்த பின்னர் ஜாமியா பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பைக் கண்டது.
1934ஆம் ஆண்டு டாக்டர் அன்சாரியும் மறைந்தார். இருவரின் உடலும் ஜாமியா மண்ணில் நல்லடக்கம் செய்யப்பட்டன. பெரும் சோதனைகளையும் கடந்து, உண்ணதம் மிக்க ஜாமியா பல்கலைகழகமானது தலைமுறைகள் தாண்டி நாட்டின் சமூக மேம்பாட்டிற்கு பெரும் பங்காற்றிவருகிறது.
இதையும் படிங்க:இந்தியா 75 - 'கூலி பேகார்' முறையை ஒழித்துக்கட்டிய பத்ரி தத் பாண்டே