கந்தகோஷ் (மேற்கு வங்கம்) : விடுதலை வீரர் லாலா லஜபதி ராயின் மரணத்திற்கு பழிதீர்க்க பகத்சிங்கும் அவரது கூட்டாளிகளும் ஆங்கிலேய காவல் கண்காணிப்பாளர் ஜேம்ஸ் ஸ்காட்டை, கொல்ல முயன்றனர்.
ஆனால் தவறுதலாக, உதவி கண்காணிப்பாளர் ஜான் சாண்டர்ஸைக் வேட்டையாடிவிட்டனர். அங்கிருந்து சிங்கும், அவரது கூட்டாளிகளும் அப்போதைய பிரிக்கப்படாத பர்த்வான் மாவட்டத்திற்கு (மேற்கு வங்கம்) தப்பிச் சென்றனர்.
பதுங்குக் குழியில் பகத் சிங்
தொடக்கத்தில், அவர்கள் பதுகேஷ்வர் தத்தாவின் இல்லத்தில் தஞ்சமடைந்தனர். காவல்துறையின் கண்காணிப்பில் இருந்து தப்பிப்பது கடினம் என்பதை உணர்ந்து, கோஷ் குடும்பத்திற்கு சொந்தமான அருகிலுள்ள வீட்டின் இரகசிய பதுங்குகுழியில் தங்கினர். இந்த வீடு கிழக்கு பர்த்வான் மாவட்டத்தில் உள்ள கந்தகோஷின் உயரி கிராமத்தில் உள்ளது.
இது குறித்து வரலாற்று ஆய்வாளர் முனைவர் சர்பஜித் ஜாஷ் கூறுகையில், “சாண்டர்ஸ் கொல்லப்பட்ட பிறகு பகத்சிங்குக்கு நம்பிக்கைக்குரிய பாதுகாப்பான ஒரு புகழிடம் தேவைப்பட்டது. அப்போதுதான் பதுகேஷ்வர் தத்தா, பகத் சிங்கை அவருடன் தனது கிராமத்திற்கு அழைத்து வந்தார்.
முதலில், அவர்கள் ரயிலில் பர்த்வான் நிலையத்தை அடைந்தனர். சிங்கை தனது சொந்த வீட்டிற்கு அழைத்து வந்தார். அந்த வீட்டில் பதுங்குக் குழி ஒன்று இருந்தது. அந்தப் பதுங்குக் குழியில் சிங் பாதுகாப்பாக தங்கியிருந்தார். அங்கு 15 நாள்களை கழித்தார்” என்றார்.
நாடாளுமன்ற தாக்குதல் திட்டம்
புரட்சியாளர் பதுகேஷ்வர், தனது அருகாமையில் வசித்த பாரம்பரிய வீட்டுக்கு பகத் சிங்கை அழைத்து வந்தார். அந்த வீட்டில் பிரத்யேகமாக பதுங்கு தளம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. டெல்லி நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் அங்கிருந்துதான் தயாரிக்கப்பட்டது.
வீட்டில் உள்ள இரகசிய பதுங்கு தளம் அழகிய வேலைபாடுகளுடன் உடையது. அதிலிருந்து மற்ற இடங்களுக்கும் பாதுகாப்பாக செல்லலாம். ஆனால் அவை தற்போது உயிர்ப்புடன் இல்லை, வௌவால்கள் வாழும் குகையாக காணப்படுகின்றது.