தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Cyclone Biparjoy:குஜராத்தில் 1,521 தங்குமிடங்கள்.. 74 ஆயிரம் பேர் சிறப்பு முகாம்களில் தங்கவைப்பு! - குஜராத் பிப்பர்ஜாய் புயல்

குஜராத் மாநிலத்தை புரட்டி போட்ட பிப்பர்ஜாய் புயல், குஜராத் கடற்கரையில் இன்று கரையைக் கடக்க உள்ள நிலையில், அம்மாநிலத்தில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. மேலும், 1,521 தங்குமிடங்கள் அமைக்கப்பட்டு மீட்புப் பணிகள் ழுழு வீச்சில் நடந்து வருகின்றன.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 15, 2023, 9:34 PM IST

ஹைதராபாத்: அரபிக்கடலில் உருவான இந்த பிப்பர்ஜாய் புயல் (Cyclone Biparjoy), குஜராத் மாநிலத்தில் உள்ள ஜகாவ் துறைமுகத்திற்கு தென்மேற்குப் பகுதியில் 200 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வானிலை ஆய்வுத் துறை டிஜி மிருத்யுஞ்சய் மொஹபத்ரா, 'கட்ச் வளைகுடாவை ஒட்டிய போர்பந்தர், ஜாம்நகர், ராஜ்கோட் மற்றும் தேவபூமி துவாரகா உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் சூறாவளியின் தாக்கம் அதிகமாக இருக்கும்' என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், 'போர்பந்தர், ஜாம்நகர், ராஜ்கோட், தேவபூமி துவாரகா உள்ளிட்ட கட்ச் வளைகுடாவை ஒட்டிய அனைத்து மாவட்டங்களிலும் இப்புயலின் தாக்கம் சூறாவளியாக மாறி அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும். இன்று மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரை மாண்ட்வி மற்றும் கராச்சி இடையே ஜகாவ் துறைமுகத்தைச் சுற்றிய மேற்கு பகுதியில் இப்புயல் கரையைக் கடக்கும்' என்று கூறினார். இந்த பிப்பர்ஜாய் புயலினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்கும் பணியில், ராணுவம், கடற்படை, தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் முழுவீச்சில் இறங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

இதனிடையே, இது குறித்து செய்தியாளர்களிடையே பேசிய இந்திய கடலோர காவல்படை, பிராந்தியத்தின் (வடமேற்கு) கமாண்டர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஏ.கே.ஹர்போலா, 'மாலை 6 மணி முதல் 8 மணிக்குள் இப்புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கிறேன். இப்புயலினால் ஏற்பாடும் பாதிப்புகளை கருத்திற்கொண்டு மீட்புப் பணிக்காக சுமார் 15 கப்பல்கள் மற்றும் 7 விமானங்கள் தயார் நிலையில் உள்ளது’ எனவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, 'டாமனில் உள்ள கடலோர காவல்படை நிலையத்தில் தயாராக உள்ள நான்கு சிறப்பு டோர்னியர் மற்றும் மூன்று ஹெலிகாப்டர்கள் புயலால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளுக்கும் அனுப்பப்படும்' என்று தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், இந்த பிப்பர்ஜாய் புயலின் தாக்குதலை சமாளிக்க குஜராத் கடலோரப் பகுதிகளில் பல தனியார் அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து கடலோரக் காவல்படையினர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், இந்திய கடலோர காவல்படை டிஐஜி முகுந்த் குர்ஜார் கூறுகையில், அரபிக்கடலில் தோன்றிய பிப்பர்ஜாய் ஜூன் 3 முதல் ஜூன் 15 ஆம் தேதி இன்றுவரை இப்புயலின் போக்கை கண்காணித்து வருவதாகவும், இப்புயலினால் வானிலை மோசமடைந்து பலத்த மழையுடன் பலத்த காற்றும் வீசக்கூடும் என்று தெரியவந்ததாகவும் கூறினார். ஆகவே, இதற்கான முன்னெச்சரிக்கையாக 24X7 என கடல்சார் அமைப்புகள் தவிர பிற தனியார் நிறுவனங்களும் மீட்புப் பணியில் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.

பிப்பர்ஜோய் புயல் வியாழக்கிழமை குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜகாவ் துறைமுகம் அருகே கரையைக் கடக்க உள்ள நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை புதுப்பிப்பில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், அதிகபட்ச மேற்பரப்பு காற்று மணிக்கு 65-85 கிமீ வேகத்தில் வீசும் என்றும் எச்சரித்துள்ளது. இதன் ஒருபகுதியாக கட்ச், தேவபூமி துவாரகா மற்றும் போர்பந்தர் மாவட்டங்களில் தேவபூமி துவாரகா, கட்ச் மற்றும் அகமதாபாத்தின் சில பகுதிகளில் பலத்த காற்று வீசியது.

இந்த நிலையில், குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜகாவ் துறைமுகத்தின் அருகே இந்த பிப்பர்ஜாய் புயல் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. அப்போது, அடுத்த ஒரு மணி நேரத்தில் கட்ச், தேவபூமி துவாரகா மற்றும் போர்பந்தர் மாவட்டங்களில். தேவபூமி துவாரகா, கட்ச் மற்றும் அகமதாபாத்தின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், அதிகபட்ச காற்று மணிக்கு 65 - 85 கிமீ வேகத்தில் வீசும் என்றும் எச்சரிக்கை விடுத்த்துள்ளது. மேலும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

பிப்பர்ஜாய் புயல் காரணமாக, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குஜராத் அரசு எடுத்து வரும் நிலையில், கடற்கரை பகுதியிலிருந்து சுமார் 10 கிமீ தொலைவு வரை உள்ள பகுதிகளி வசிப்போரை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர். அந்தவகையில், இதுவரை 74 ஆயிரம் பேர் இவ்வாறு அப்புறப்படுத்தப்பட்டு சிறப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Cyclone Biparjoy: இன்று மாலை கரையைக் கடக்கிறது பிப்பர்ஜாய் புயல் - முக்கிய அப்டேட்!

ABOUT THE AUTHOR

...view details