துமகுரு: கர்நாடக மாநிலத்தில் கரோனா தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் முதல் கட்டமாக 9, 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதியும், ஆறு முதல் எட்டாம் வகுப்புகளுக்கு கடந்த செப்டம்பர் 6ஆம் தேதியும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
இந்நிலையில், துமகுரு மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா தொற்றுப் பரிசோதனையில், 73 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதில் 39 பேர் பெண் குழந்தைகள்.
அச்சத்தில் மாணவர்கள்
இதுகுறித்து மாவட்ட சுகாதார அலுவலர், டாக்டர். நாகேந்திரப்பா, "தொற்று கண்டறியப்பட்டுள்ள மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவ சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இதனால் பள்ளி மூடப்பட்டுள்ளது.
பள்ளிகளில் நோய்த்தொற்று யாரிடம் இருந்து பிற மாணவர்களுக்குப் பரவியது என்பதை அறிவது சற்று கடினம். இதனால், மாணவர்கள் பள்ளிக்கு வர அச்சப்படுவார்கள்" எனத் தெரிவித்தார்.
கரோனா தொற்று அச்சத்தால், கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி முதல் மாணவர்களின் வருகை சராசரியாக 55 விழுக்காடு தான் பதிவாகியுள்ளது.