தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

72 வயது மூதாட்டிக்கு 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதிய சலுகை - Karnataka bengaluru

பெங்களூரு: 72 வயதான மூதாட்டி கர்நாடக மாநில அரசில் பல்வேறு துறைகளில் 25 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில், 14 ஆண்டுகளுக்குப் பின்னர் ஓய்வூதியம் பெறும் உரிமையை நீதிமன்றத்தை நாடி பெற்றுள்ளார்.

ஓய்வூதியம்
ஓய்வூதியம்

By

Published : Apr 29, 2021, 1:38 PM IST

கர்நாடக மாநிலம் ரைச்சூர் மாவட்டத்தில் உள்ள லிங்காசூரில் வசிக்கும் ஜி.பி. சரோஜம்மா என்பவர் 25 ஆண்டுகள் அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்றார். ஆனால் அவருக்குப் பல ஆண்டுகளாக ஓய்வூதிய சலுகைகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த சரோஜம்மா, நீதிமன்றத்தை நாடினார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம். நாகபிரசனின் தலைமையிலான அமர்வு, மனுதாரரின் சேவையை நிரந்தரமாக்க வேண்டும் என்று கூறியது.

தொடர்ந்து அமர்வு கூறுகையில், “1992 முதல் அனைத்து வகையான ஓய்வூதிய சலுகைகளும் வழங்கப்பட வேண்டும்” என்று உத்தரவிட்டது.

மேலும் அமர்வு கூறியதாவது:

25 ஆண்டுகள் அரசுப் பணிக்குப் பின்னர், நிரந்தர விண்ணப்பதாரர் சேவையை அரசு நிறுத்தவில்லை. ஊழியருக்கு எதையும் செலுத்தாமல் சேவையிலிருந்து விடுவிப்பது சுரண்டல். இது ஒரு நல்ல நிறுவன உரிமையாளரின் நடத்தைக்கு அழகல்ல.

விதிப்படி, தற்காலிகமாக 10 ஆண்டுகள் பணியாற்றிய ஒரு பணியாளரை நிரந்தர ஊழியராக நியமிக்க வேண்டும். விண்ணப்பதாரர் நிரந்தரப் பதவிக்குத் தகுதியானவர்.

அனைத்து ஓய்வூதிய சலுகைகளும் அடுத்த நான்கு மாதங்களுக்குள் செலுத்தப்பட வேண்டும் சேவையின் காலத்தைக் கணக்கிட வேண்டும்.

இவ்வாறு அமர்வு தெரிவித்தது.

ABOUT THE AUTHOR

...view details