சிந்த்வாரா:பிறப்புச் சான்றிதழில் தொடங்கி, இறப்புச் சான்றிதழ் வரை ஒருவர் எது செய்ய வேண்டுமானலும் அரசு வழங்கும் சான்றிதழ்கள் அவசியமாகியுள்ளன. இப்படி சான்றிதழ்கள் ஆண்டு கொண்டிருந்த காலத்தில், நாட்டு மக்களின் அடிப்படை சான்றிதழாக ஆதாரை அறிவித்தது. ஆதார் முக்கியமென அறிவித்தப்பின், இன்றுவரை சில கிராமங்களில், மக்கள் இன்றுவரை ஆதாருக்காக தேடாத கடைகள் இல்லை, நிரம்பாத வீதிகள் இல்லை. அந்த அளவிற்கு சான்றிதழ்களை கட்டாயப்படுத்தியுள்ளது மத்திய மாநில அரசுகள்.
இதனாலோ என்னவோ மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த ஒருவர், பிறந்த இரண்டரை மாதமே ஆன அவரது குழுந்தைக்கு பிறப்புச் சான்றிதழ், ஆதார், அடையாளச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் என மொத்தம் 33 சான்றிதழ் பெற்று அவரது மகளை உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறச் செய்துள்ளார். பிறந்து இரண்டே மாதத்தில் 'வெர்ல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' இடம்பெற்ற குழந்தை என்ற பெருமையையும் பெற்றுள்ளது அந்தப் பெண் குழந்தை.
மத்திய பிரேதச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கேசரிநந்தன் சூர்யவன்ஷி மற்றும் பிரியங்கா தம்பதியினர். இவர்களுக்கு கடந்த ஜூலை மாதம் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்தப் பெண் குழந்தைக்கு சரண்யா சூர்யவன்ஷி என்று பெயரிட்டுள்ளனர். கேசரிநந்தன் சூர்யவன்ஷி அஞ்சல் துறையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், பிறந்த குழந்தை ஒன்று பிறந்த சில மாதங்களிலே அதிகபடியான சான்றிதழ்களைப் பெற்று "வெர்ல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்-ல்" இடம்பெற்றுள்ளார் என்ற செய்தியை அறிந்து, அவரது மகளும் இது போன்று உலக சாதனை பெற வேண்டும் என எண்ணியுள்ளார்.
இதனையடுத்து, சரண்யா உலக சாதனையில் இடம்பெற ஒட்டுமொத்த குடும்பமே உழைத்திருக்கிறது. ஆதார், கடவுச்சீட்டு (Passport), (national health card), (immunization card), (ladli lakshmi certificate), சாதிச் சான்றிதழ் (caste certificate ), இருப்பிடச் சான்றிதழ் (native residential certificate), சுகன்யா சம்ரித்தி கணக்கு திட்டம் (sukanya samiriddhi account), மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் (mahila samman savings patra), ராஷ்ட்ரிய சேமிப்பு பத்ரா (rashtriya savings patra), கிசான் விகாஸ் பத்ரா (kisan vikas patra), தபால் அலுவலக சேமிப்பு கணக்கு (post office savings account), PNB ஏடிஎம் கார்டு (PNB atm card), பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு (public provident fund account) போன்ற 33 அரசு அங்கீகரிக்கப்பட்ட 33 சான்றிதழ்களை பெற்று சரண்யா "வெர்ல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்-ல்" இடம்பெற்றுள்ளார்.