தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

54 ஆண்டுகளுக்குப் பிறகு தந்தையான ஓய்வு பெற்ற ராணுவ வீரர்! - 70 வயதில் குழந்தை பெற்ற ராஜஸ்தான் மூதாட்டி

ராஜஸ்தானில் 70 வயது மூதாட்டி செயற்கை கருத்தரிப்பு மூலம் ஆண் குழந்தையை பெற்றுள்ளார்.

army
army

By

Published : Aug 9, 2022, 10:09 PM IST

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கோபிசந்த்(75)- சந்திரவதி(70) தம்பதிக்கு, 54 ஆண்டுகள் கழித்து குழந்தை பிறந்துள்ளது. துடிப்பான ராணுவ வீரராக பணியாற்றிக் கொண்டிருந்த கோபிசந்த், வங்கதேசப் போர் உள்பட பல்வேறு போர்களில் சேவையாற்றினார். அதுவரை இந்த தம்பதிக்கு குழந்தைப்பேறு இல்லை.

ராணுவத்திலிருந்து வந்த பிறகு குழந்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என மிகவும் ஆவலுடன் இருந்துள்ளனர். மருத்துவர்களை அணுகியுள்ளனர். ஆனால் குழந்தை பிறக்கவில்லை. இந்த நிலையில், 54 ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தை பிறந்துள்ளது. ஐவிஎஃப் (IVF)எனும் செயற்கை கருத்தரிப்பு மூலம் 70 வயதில் சந்திரவதி குழந்தை பெற்றுள்ளார். நேற்று(ஆகஸ்ட் 8) அல்வாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சந்திரவதிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

கோபிசந்தின் குழந்தை

குழந்தை மூன்றரை கிலோ எடையில் இருப்பதாகவும், ஆரோக்கியமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். 54 ஆண்டுகளுக்குப் பிறகு தந்தையான ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கோபிசந்த் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

இதையும் படிங்க:'செஸ்-க்காக வந்தேன்... சேலை வாங்கிச் செல்கிறேன்': கென்யா பயிற்சியாளர்

ABOUT THE AUTHOR

...view details